திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டி


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டி
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டி வருகிற 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறையும், சமூகரெங்கபுரம் பனைமர பைன் டெக் நிதி நிறுவனமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் வருகிற 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை பொருளியல் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கு பெறும் வினாடி-வினா, கட்டுரை, பேச்சு போட்டி, நடனம், ஓவியம் வரைதல், ரங்கோலி உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் வருகிற 19-ந்ேததி நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதிக புள்ளிகள் பெறும் கல்லூரிக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பொருளியல் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா, பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டி என மூன்று வகையான போட்டிகள் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

போட்டியில் பங்கு பெறுவோர் பொருளியல் துறை பேராசிரியர்கள் கணேசன், சிவ.இளங்கோ, சிவமுருகன் மற்றும் மருதையா பாண்டியன் ஆகியோரை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) தொடர்பு கொள்ளவும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வருகிற 19-ந்தேதி நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ், பனைமர பைன்டெக் நிறுவனர் பலவேசமுத்து மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story