மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: பெரம்பலூர்-சென்னை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன


மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: பெரம்பலூர்-சென்னை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன
x

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர்-சென்னை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன.

பெரம்பலூர்

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 13-வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் அரையிறுதி போட்டிகள் நடந்தது. இதில் பெரம்பலூர்-திருப்பத்தூர் அணிகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் சென்னை-அரியலூர் அணிகள் மோதின. இதில் பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதி போட்டி இன்று (திங்கட்கிழமை) மதியம் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு தனலட்சுமி அம்மையார் நினைவு சுழற்கோப்பையும் ரூ.25 ஆயிரம் பரிசு தொகையும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகையும் மாலையில் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது.


Next Story