மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது.
திருச்சி
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருச்சியில் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியை சங்க செயலாளர் மதன் கென்னடி தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தரைப்பயிற்சி, சமநிலை சட்டங்கள், கிடைமட்ட பட்டை, பொம்மல் குதிரை, ஒற்றைத்தூண், சமநிலையற்ற சட்டங்கள், காலான் மேடை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பல்வேறு வயது பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story