மாநில அளவிலான வினாடி- வினா போட்டி


மாநில அளவிலான வினாடி- வினா போட்டி
x

தேர்தல் தொடர்பான மாநில அளவிலான வினாடி- வினா போட்டியில் வாணியம்பாடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பத்தூர்

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான இணைய வழியிலான வினாடி வினா போட்டியில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதல் பரிசை வென்றுள்ளது. இதில் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சாரதி மாநிலத்திலேயே முதல் இடமும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா தர்ஷினி இரண்டாவது இடமும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோகன் ஸ்ரீபிரசாந்த் மூன்றாவது இடமும் பெற்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் சால்வை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி பாராட்டினர். தலைமையாசிரியர் எஸ்.தமிழரசி, உதவி தலைமையாசிரியர் எஸ்.குமரேசன், ஆசிரியர் சதிஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களும் பாராட்டினர்.


Next Story