விளையாட்டு விடுதிகளில் மாணவிகளை சேர்க்க மாநில அளவிலான தேர்வு போட்டி


விளையாட்டு விடுதிகளில் மாணவிகளை சேர்க்க மாநில அளவிலான தேர்வு போட்டி
x
தினத்தந்தி 28 May 2023 2:30 AM IST (Updated: 28 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு விடுதிகளில் மாணவிகளை சேர்க்க மாநில அளவிலான தேர்வு போட்டி நடைபெற்றது.

தேனி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகின்றன. இதில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

அதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் உள்ள மாணவிகள் விடுதிகளில் மாணவிகள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வு போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் 15 பேர் கலந்துகொண்டனர். தேர்வு போட்டியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் செய்திருந்தார்.

இதில், சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், கபடி பயிற்சியாளர்கள் நாகராஜ், புவனேஸ்வரி, பியாரா ஆகியோர் மாணவிகளை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், பயிற்சியாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9-ம் வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு மாணவிகளுக்கான தேர்வு போட்டி நடக்கிறது.


Next Story