மாநில அளவிலான இறகுபந்து போட்டி
மாநில அளவிலான இறகுபந்து போட்டி
தொண்டி
தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில, மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சாதிக் பாட்சா தலைமை தாங்கினார். தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் மாநில அளவிலான ஓபன் போட்டியில் தஞ்சாவூர் லோகேஷ், சூர்யா அணி முதல் பரிசையும், காரைக்குடி வீரபாண்டியன் மணிகண்டன் இரண்டாம் பரிசும், காரைக்கால் செந்தில், சேகர் மூன்றாம் பரிசும், கம்பம் தர்மா, குரு அணி நான்காம் பரிசும் பெற்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பரமக்குடி சசிகுமார் சங்கர் முதல் பரிசும், தொண்டி சாதிக் பாட்ஷா, குதுப்தீன் இரண்டாம் பரிசும், ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தா, லாரன்ஸ் மற்றும் ராமநாதபுரம் கணேஷ் மகேந்திரன் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். மாவட்ட அளவில் ஓபன் பிரிவில் தவனேஷ் சூர்யா முதல் பரிசையும், அலெக்ஸ், முத்துக்குமார் இரண்டாம் பரிசையும், யாசின், தீபக், கல்யாண், கந்தவேல் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.