பென்னாத்தூர் அரசு பள்ளியில் மாநில கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு


பென்னாத்தூர் அரசு பள்ளியில் மாநில கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு
x

பென்னாத்தூர் அரசு பள்ளியில் மாநில கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

அடுக்கம்பாறை

பென்னாத்தூர் அரசு பள்ளியில் மாநில கண்காணிப்பு குழு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாநில கண்காணிப்பு குழு அலுவலர் லட்சுமிபிரியா திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் சத்துணவு கூடம், அறிவியல் ஆய்வகம், யோகா மையம், நூலகம், கணினி பயிற்சி அறை, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் மாணவர்களிடம், ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மேலும் சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியையும் பார்வையிட்டார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப்-கலெக்டர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார் செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தயாளன், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) ரதிதிலகம், மருத்துவமனை குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், வருவாய் ஆய்வாளர் உலகநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story