அரசு மருத்துவ மனையில் ரூ.7 லட்சத்தில் நவீன கருவிகள்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ரூ.7 லட்சத்தில் நவீன கருவிகள்
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்தத்தில் உள்ள நோய்களை கண்டறியும் தானியங்கி கருவி மற்றும் தைராய்டு நோய் கண்டறியும் கருவி ஆகிய மருத்துவ உபகரணங்களை ரூ.7 லட்சத்தில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வாளகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை மருத்துவ அலுவலர் கே.டி.சிவகுமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் தொகுதி அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கருவிகளை வழங்கி, தொடங்கிவைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
முதலிடம்
நாம் மருத்துவத்துறையில் வளர்ந்துகொண்டிருகிறோம். மருத்துவம் மிகவும் முக்கியமானதாகும். நோயாளியை சாதாரன ஒரு மருத்துவத்திற்காக அருகாமையில் உள்ள வேலூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிகிச்சைகாக அனுப்புவதினால் அந்த நோயாளிக்கு பல்வேறு இன்னல்கள், சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த அரசு தலைமை மருத்துவமனையானது சேவை செய்வதில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மருத்துவமனை ஆகும்.
ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினரை இந்த தொகுதி பெற்றுள்ளது. இனிவருங்காலத்திலும் இம்மருத்துவமனைக்கும், பல்வேறு உதவிகள் தேவைபடுகின்ற மக்களுக்கும் உதவிகளை செய்ய வேண்டும். இந்த வாய்ப்பினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு நலமோடு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு, அறுவை சிகிச்சை நிபுணர் பி.பிரபாகரன், மருத்துவர்கள், நகரமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரசு மருத்துவமனை மேலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.