ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில தலைவர் உண்ணாவிரதம்


ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில தலைவர் உண்ணாவிரதம்
x

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதியில் வசிக்கிற இந்து அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் ராமன் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ராமன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வருவாய்த்துறையினருடன் பேசி வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story