ஆட்டோவில் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த டிரைவர்-துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
ஆட்டோவில் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த டிரைவர்-துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
நீலகிரி
கூடலூர்
கூடலூரை அடுத்த மேல் கூடலூரில் வசிக்கும் அப்சல்ஜா என்பவரது மகன் நிஜாமுதீன் (வயது 41) ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் பந்தலூரில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவரது மனைவி காசிராணி என்பவர் பயணம் செய்துள்ளார். இறங்கும் போது அவரது பணப்பையை (மணிபர்ஸ்) ஆட்டோவில் விட்டுச் சென்றுள்ளார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் அப்சல்ஜா பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளர். அதன்பின்னர் அந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் அப்சல்ஜாவை கூடலூர் போலீஸ் துணை சூப்பபிரண்டு மகேஷ் குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story