சிலை கண்டெடுப்பு
பாலம் கட்ட குழி தோண்டிய போது 1½ அடி உயர ஐம்பொன் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மேலவிசலூர் நாகரசம்பேட்டை வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக குழி தோண்டிய ேபாது, மேலவிசலூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்வமணி என்பவர் வீட்டின் பின்புறம் 1½ அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி செல்வமணி விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை பார்வையிட்டனர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் சிலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story