Normal
கருணாநிதி சிலை திறப்பு விழா நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு-செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு
கருணாநிதி சிலை திறப்பு விழா நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்:
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி நடுவே அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழா நாமக்கல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன எல்.இ.டி. வாகனத்தின் மூலம் நாமக்கல் கடைவீதி அருகே மலைக்கோட்டை நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் பொதுமக்கள் பார்வையிட நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story