சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் ஆஜர்


சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் ஆஜர்
x

கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் நேற்று ஆஜரானார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் நேற்று ஆஜரானார்.

சிலை கடத்தல் மன்னன்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகம் சித்தமல்லி, வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் கடத்தப்பட்டன. அதே ஆண்டில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சரகம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து 8 சிலைகள் கடத்தப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் பழுவூரில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் மற்றும் வீரவநல்லூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் இருந்தும் சிலைகள் கடத்தப்பட்டன.

கைது-சிறையில் அடைப்பு

இந்த சிலை கடத்தல் வழக்குகளில் அமெரிக்காவை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரகபூரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

விசாரணை ஒத்தி வைப்பு

இந்த வழக்குகளின் மீதான விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நேற்று நடந்தது. இதையொட்டி சுபாஷ்சந்திரகபூரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கும்பகோணம் கோர்ட்டுக்கு அழைத்து வந்து கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சுபாஷ்சந்திர கபூரை போலீசார் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story