கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்


கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்
x

கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

ஜீயபுரம்:

பெட்டவாய்த்தலை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமதுயாசிர்(வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிளை தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15-ந் ேததி அதிகாலை பெட்டவாய்த்தலை சந்தையின் முன்பு அந்த கட்சியின் கொடிக்கம்பம் அனுமதியின்றி நடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முகமதுயாசிர் மீது பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் முன்னிலையில், அந்த கொடிக்கம்பம் நேற்று அகற்றப்பட்டது. பின்னர் அந்த கொடிக்கம்பமும், கொடியும் ெபட்டவாய்த்தலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பெட்டவாய்த்தலை கடைவீதி பகுதியில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் முபாரக் அலி தலைமையில் பெட்டவாய்த்தலை கடைவீதியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மறியலால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story