எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி
பாலக்கோடு:
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பா.ஜனதா செய்தி தொடர்பாளர்களை கைது செய்யக்கோரி பாலக்கோடு பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் பைரோஸ் அன்சாரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் முகம்மத் உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அதிக்குல்லா, முன்னாள் மாவட்ட தலைவா் ஜாவித், செயற்குழு உறுப்பினர் ஜிலான், துணை செயலாளர் ஹைதர், பொருளாளர் நிஜாம், செயற்குழு உறுப்பினர் அலி, செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயற்குழு உறுப்பினர் தஜ்மல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story