வெங்காய மூடைகள் திருட்டு


வெங்காய மூடைகள் திருட்டு
x

வெங்காய மூடைகள் திருட்டு

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி அருகே உள்ள நாசர்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 41). இவர் நாசர் புளியங்குளம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.. இவருடைய தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்து தற்போது அந்த வெங்காயத்தை அறுவடை செய்து தோட்டத்தில் வைத்துவிட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அதிகாலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது சுமார் 10 மூடை வெங்காயம் மற்றும் நான்கு தார்பாய்களையும் யாரோ திருடி சென்று விட்டதை கண்டு கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story