2 ஆடுகள் திருட்டு


2 ஆடுகள் திருட்டு
x

2 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறாரக்ள்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் தனது வீட்டின் அருகே 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். மேலும் ஆடு திருடும் போது வீட்டில் உள்ளவர்கள் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் பிளக் வயர்களை துண்டித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story