3 ஆடுகள் திருட்டு


3 ஆடுகள் திருட்டு
x

ஏர்வாடி அருகே 3 ஆடுகள் திருட்டு

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளத்தை சேர்ந்தவர் மாசானமுத்து மகன் சார்லஸ் (வயது 30). விவசாயி. இவர் 3 ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் இவர் தனது ஆடுகளை ஊருக்கு மேற்கே உள்ள தொழுவத்தில் கட்டி போட்டிருந்தார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது 3 ஆடுகளையும் காணவில்லை. இரவில் மர்ம நபர்கள் 3 ஆடுகளையும் திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story