பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது


பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
x

வாணியம்பாடி நியூ டவுன் ரெயில்வேகேட் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கதிர் ஆனந்த் எம்.பி. கூறினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நியூ டவுன் ரெயில்வேகேட் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கதிர் ஆனந்த் எம்.பி. கூறினார்.

வேலூர் தொகுதி எம்.பி. கதிர் ஆனந் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட நெடு நாட்களாக வாணியம்பாடியில் உள்ள நியூடவுன் ெரயில்வே பாலம் அமைப்பது குறித்து பலமுறை நான் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். அதேபோல் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள ஏ.வ.வேலுவிடமும் இது குறித்து கோரிக்கை மனு அளித்தேன். அவரது உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மாநில அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில்வே துறையை பொறுத்தவரையில் மேம்பாலம் அமைப்பதா, தரைப் பாலம் அமைப்பதா என்ற நிலையில், தற்போது ஏற்கனவே இருந்த கட்டமைப்புகள் வேறாக உள்ளதால் புதிதாக வடிவமைக்கப்பட வேண்டி உள்ளது. அதனை முடிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாத காலமாகும். இங்கு குறுகிய இடமே இருப்பதால் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைக்க வேண்டும். ஆம்பூரை போல இங்கு தேவையான இட வசதிகள் இல்லை. கடந்த 7, 8 ஆண்டுகளாக இந்த பணிகள் காலதாமதமானதால் இந்த பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்புக்கள் செய்து வீடுகள் கட்டி உள்ளனர். அவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த முறை போடப்பட்ட பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடை தற்போது மாற்ற வேண்டும். புதிய திட்ட மதிப்பு தான் போட வேண்டும்., இவை அனைத்தையும் செய்த பின்பு நான் கொடுத்த வாக்குறுதிபடி நியூடவுன் பாலத்தை கட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். நீதிமன்றத்தில் ஒரு சிலர் வழக்கு தொடுத்ததாக கூறுகின்றனர். இது மக்கள் பிரச்சினை. இதனை முறையாக அணுகி நீதிமன்றத்தில் இருந்தும் அனுமதி பெற்று பாலம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story