அனைத்து கிராமங்களுக்கும் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


அனைத்து கிராமங்களுக்கும் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x

நாங்குநேரி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதி. கிராமப்புறங்களே இங்கு அதிகம் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவருக்கும் போதிய போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையே இன்று வரையிலும் உள்ளது. நான் எங்கு சென்றாலும், அங்குள்ள மக்கள் வைக்கின்ற முதல் கோரிக்கை, எங்கள் ஊருக்கு பஸ் வசதி செய்து தாருங்கள் என்பதுதான். அதனால் தொகுதி முழுவதும் அதிக பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும் புதிய போக்குவரத்து வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை தளர்த்தி நாங்குநேரி தொகுதி மக்களின் நலன்கருதி புதிய வழித்தடங்களுக்கு உடனடியாக ஒப்புதல்கள் வழங்கவும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story