ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை - அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை


ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை - அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
x

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வருவதுய் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றுவது குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னையில் தலைமைச்செயலகத்தில் உள்ள 2-வது தளத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை செயலர், சைபர் கிரைமை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய ஏற்கெனவே, தமிழக அரசு சார்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசரச்சட்டத்தில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகள் என்ன?, மேலும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


Next Story