தமிழகத்தில் 31 அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை- அமைச்சர் பொன்முடி தகவல்
31 புஅரசு கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை,
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர், வாலாஜாபாத் அருகே கலைக்கல்லூரி தொடங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
உத்திரமேரூர் தொகுதியில் ஏற்கனவே கலைக் கல்லூரி உள்ளது. முதல்-அமைச்சர் எந்த தொகுதியில் கல்லூரி இல்லையோ அந்த தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 1½ ஆண்டுகளில் 31 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கல்லூரிகளில் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேராசிரியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story