குழி பணியாரத்தில் இரும்பு கம்பி கிடந்ததால் பரபரப்பு


குழி பணியாரத்தில் இரும்பு கம்பி கிடந்ததால் பரபரப்பு
x

அரியலூர் தனியார் உணவகத்தில் குழி பணியாரத்தில் இரும்பு கம்பி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்

அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம் (வயது 44). இவர் எருத்துக்காரன் பட்டி 9-வது ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர் அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள மாருதி உணவகத்தில் குழிப்பணியாரம் சாப்பிட்ட போது தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு எடுத்து பார்த்த போது இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் குழிப்பணியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட தனியார் உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். உணவகம் சார்பில் தவறுதலாக நடந்து விட்டதாகவும், இது போன்று இனி நடக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story