மாணவரை கொன்ற காதலி வீடு மீது கல்வீச்சு


மாணவரை கொன்ற காதலி வீடு மீது கல்வீச்சு
x

மாணவரை கொன்ற காதலி வீடு மீது பொதுமக்கள் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

மாணவரை கொன்ற காதலி வீடு மீது பொதுமக்கள் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்வீச்சு

மாணவர் ஷாரோன்ராஜை அவரது காதலி கிரீஷ்மா தீர்த்து கட்டிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கிரீஷ்மா மீது அவருடைய சொந்த ஊரை சேர்ந்த மக்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று திடீரென சிலர் கிரீஷ்மா வீட்டுக்கு சென்று சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்தன.

வீட்டில் யாரும் இல்லை

அதே சமயத்தில் கிரீஷ்மா வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டி இருந்தது. பொதுமக்கள் தாக்குதல் நடத்திய போது அங்கு யாரேனும் இருந்திருந்தால் அவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பளுகல் போலீசார் தெரிவித்தனர்.

கிரீஷ்மா ஏற்கனவே வழக்கில் கைதான நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஒருவரும் போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர். அவர்களிடமும் கேரள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தான் பொதுமக்கள் தாக்குதல் நடத்திய போது கிரீஷ்மா வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story