சாலையில் கற்கள் பெயர்ந்தன


சாலையில் கற்கள் பெயர்ந்தன
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எருமாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கற்கள் பெயர்ந்தன. எனவே, மீண்டும் சீரமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

நீலகிரி

பந்தலூர்,

எருமாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கற்கள் பெயர்ந்தன. எனவே, மீண்டும் சீரமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்கள்

பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எருமாடு, வெட்டுவாடி, கூலால், கள்ளிச்சால், இன்கோநகர், பனஞ்சிறா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100-க்கும்மேற்பட்டோர் படித்து வருகின்றனர். எருமாடு பஜாரில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை வெட்டுவாடி பகுதிக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும் வாகனங்களில் சென்றவர்கள் தவறி விழுந்து காயமடைந்து வந்தனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதனால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய சாலை

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை மூலம் கடந்த மாதம் சாலையை புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது. சாலை அமைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் சிமெண்ட் சாலையில் போடப்பட்ட கற்கள் பெயர்ந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். சாலையின் மேற்பகுதியில் ஆங்காங்கே கற்கள் பரவி கிடக்கிறது. தரமாக சாலை அமைக்காததால் கற்கள் பெயர்ந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கற்கள் தொடர்ந்து பெயர்ந்து வருவதால், சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். மேலும் மீண்டும் புதிய சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.


Next Story