புதுப்பேட்டை அருகே தனியார் பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு


புதுப்பேட்டை அருகே தனியார் பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 11:35 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே தனியார் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் மகன் வீரப்பன் (வயது 22). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை பண்ருட்டியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சேமக்கோட்டை பேருந்து நிறுத்தம் வந்தபோது, வீரப்பன் கண்டக்டரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அந்த பஸ் சற்று தூரம் சென்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீரப்பன், பஸ்சில் இருந்து இறங்கியவுடன், கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் பஸ் கண்ணாடி உடைந்து போனது. இந்த தாக்குதலில் பஸ்சில் சென்ற பயணிகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய வீரப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story