அந்தரத்தில் தொங்கியபடி வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்
அந்தரத்தில் தொங்கியபடி வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
நெமிலி அருகே உள்ள ஜாகீர் தண்டல கண்டிகை மற்றும் கீழ்வெண்பாக்கம் ஆகிய கிராமங்களில் நேற்று தைமாத திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கீழ்வீதியில் நடந்த மயிலேறு திருவிழாவில் ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து 4 பேர் பலியாகினர்.
அதனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி நேற்று ஜாகீர் தண்டல கண்டிகை, கீழ்வெண்பாக்கம் கிராமங்களில் ஆகாய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கிடைத்த தகரளின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்துவந்து ஆகாயமாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.