பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
பனமடங்கி அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா பனமடங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன், சமூகநல ஊழியர்கள், பனமடங்கி போலீசார், வருவாய்த்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது பனமடங்கியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் 16 வயதுடைய மாணவிக்கும் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கப்பட்டது.
Related Tags :
Next Story