ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி மறியல்


ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி மறியல்
x

செந்துறை அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கொடுக்கூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், அங்குள்ள ஏரிகளில் மீன்கள் செத்து மிதப்பதையும் தடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குவாகம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story