வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.23 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.23 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது
x

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.23 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி

சின்னமனூரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பாதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது புது கிணற்று பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 34) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ரூ.23 லட்சம் மதிப்பபிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (37), கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த நந்தகுமார் (31), போடியை சேர்ந்த செல்லையா (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story