எஸ்.டி.பி.ஐ. சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
திப்புசுல்தான் பிறந்தநாளையொட்டி எஸ்.டி.பி.ஜ. கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல்
திப்பு சுல்தான் பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி ஒருங்கிைணப்பாளர் முகமது நசீர் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மண்டல செயலாளருமான முஜிபுர் ரகுமான் பங்கேற்று திப்புசுல்தான் புலிக்கொடியை ஏற்றிவைத்து, மணிமண்டபத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் அப்துல் லத்தீப், ரியாஸ்தீன், சையது முகமது, அங்குசாமி, அபுதாஹீர் உள்பட பகுதி, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story