எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கல்லார் மெய்தீன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீத், தஞ்சை மண்டல தலைவர் தபரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் அபுஹாசிம் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் யாமின் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், நாகை முதல் தஞ்சை வரை குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால், அருகில் உள்ள நாகூர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பல்வேறு வகைகளில் பிரச்சினை ஏற்படுவதால், அங்கு நிலக்கரி இறக்குமதிக்கு தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மின்சார அளவினை மாதந்தோறும் கணக்கீட்டு கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மெய்தீன் நன்றி கூறினார். இதில் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.