எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
x

எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பு தலைவரும், மண்டல தலைவருமான ஜூல்பீகர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முகைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்களாக காயல்பட்டினம் நிஜார், ஸ்ரீவைகுண்டம் உஸ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. பாலத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முகமது உமர், பொருளாளர் அஷ்ரப் அலி பைஜி, மாவட்ட செயலாளர் மைதீன்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்சுதீன், நிஜார் மற்றும் சேக் முகைதீன் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story