எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதுரவூப் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முகமதுரபி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாசில் பேசினார். மயிலாடுதுறை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்துல் சாதிக், வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் புர்ஹானுதீன், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீது பரோஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மகேசு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story