எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நூலகம் அருகே இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், பொதுச் செயலாளர் களந்தை மீராசா, செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷபி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் சுலைமான், வர்த்தக அணி தலைவர் ஜலீல், துணை தலைவர் பீமாஸ் உசேன், பேரவை தொகுதி தலைவர் சையது இப்ராகிம், விக்கிரமசிங்கபுரம் நகர துணைத் தலைவர் பீர்ஷா, துணைச் செயலர் அன்சர், பொருளாளர் சம்சுதீன், நகர செயற்குழு உறுப்பினர்கள் பாலாஜி, முகமது ரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வெள்ளாங்குளி, வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை, மேலச்செவல், களக்காடு நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story