முத்தாரம்மன் கோவிலில் வினோத வழிபாடு


முத்தாரம்மன் கோவிலில் வினோத வழிபாடு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவிலில் வினோத வழிபாடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பகுதியில் மழை பெய்ய வேண்டி சிதம்பராபுரம் முத்தாரம்மன் கோவிலில் புதியதாக வைக்கப்பட்ட நாகதேவதைக்கு கும்பாபிஷேகம் மற்றும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வேம்பு, அரசமரத்துக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பின்னர் பங்கேற்ற அனைவருக்கும் திருமண விருந்து பரிமாறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருமண மொய் பணம் காணிக்கை செலுத்தினர்.


Next Story