சூளகிரியில்சிறுவனை கடிக்க விரட்டி செல்லும் தெருநாய்கள்வீடியோ வைரலாக பரவி வருவதால் பரபரப்பு
சூளகிரியில் சிறுவனை தெருநாய்கள் கடிக்க விரட்டி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூளகிரி
சூளகிரியில் சிறுவனை தெருநாய்கள் கடிக்க விரட்டி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுவனை விரட்டிய தெருநாய்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் அருகே நேற்று முகமது முஸ்கிம் (வயது6) என்ற சிறுவன் நடந்து சென்றான். அப்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுவனை கடிக்க பாய்ந்து வந்தன. விரட்டி வந்த தெருநாய்களை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், அலறினான்.
இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் தெருநாய்களை விரட்டி விட்டு சிறுவனை மீட்டனர். சிறுவனை கடிக்க தெருநாய்கள் விரட்டி செல்லும் சம்பவம், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அந்த வீடியோ பதிவுகள் சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சூளகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
சூளகிரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மேலும் தெருநாய்கள், ஆடு, மாடுகள் ஆகிய கால்நடைகளையும் அவ்வப்போது கடித்து குதறி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.