அரசு பஸ்சுக்குள் படுத்து உறங்கும் தெருநாய்கள்
அரசு பஸ்சுக்குள் படுத்து உறங்கும் தெருநாய்கள்
பந்தலூர்
கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து பந்தலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொளப்பள்ளிக்கு காலை, மதியம், மாலை என 3 நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ் ஒன்று, இரவில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொளப்பள்ளி பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தப்படும் அந்த பஸ்சில் இருந்து டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இறங்கி சென்ற பிறகு, தெருநாய்கள் ஏறி படுத்து உறங்குகின்றன. மேலும் அசுத்தம் செய்கின்றன. இதனால் மறுநாள் காலையில் பஸ்சை எடுக்க வரும் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணிக்க வரும் பொதுமக்கள் அச்சப்படுவதோடு துர்நாற்றத்தால் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும், கதவுகள் கொண்ட பஸ்சை இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.