தெருக்கூத்து கலைஞர் தற்கொலை


தெருக்கூத்து கலைஞர் தற்கொலை
x

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). கிராமங்களில் தெருக் கூத்து மற்றும் நாடகங்களில் நடிப்பவர். கடந்த 2022-ல் ஒரு வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்த இவர் ஜாமீனில் வெளிவந்தார்.

மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் இருந்த இவர் அவருடைய விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெங்கடேசன் மகன் மோகன் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story