விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரசாரம்


விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரசாரம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது

திருவாரூர்

முத்துப்பேட்டை:

விலைவாசி உயர்வு, வேலையின்மையை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம், ஆசாத்நகர், புதிய பஸ் நிலையம், பெரிய கடைதெரு ஆகிய பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மத்தியஅரசை கண்டித்து பேசினார். பிரசாரத்தில் 100 நாள் வேலையில் நகர் பகுதிகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story