விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன தெரு முனை கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன தெரு முனை கூட்டம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
மத்தியஅரசின் சமஸ்கிருதம், இந்தி மொழி திணிப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடன்குடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன தெருமுனை கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி ஆகியோர் பேசினர். மேலும், கூட்டத்தில் சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் க.வேம்படிமுத்து, உடன்குடி நகர செயலாளர் தௌபிக் அன்சாரி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், உடன்குடி நகர பொருளாளர் சக்திவேல், உடன்குடி ஒன்றிய துணை செயலாளர் சுடலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.