சேரும், சகதியுமாக தெருவில் நாற்று நடும் போராட்டம்
புளியங்குடியில் சேரும், சகதியுமாக தெருவில் நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள்
தென்காசி
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட 14-வது வார்டில் ஜின்னா நகர் 1-வது தெருவின் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யப்படாததால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சேரும் சகதியாக உள்ளது. இது தொடர்பாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து த.மு.மு.க. சார்பில் த.மு.மு.க. நகர தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் எம்.எஸ.்ஹமீது, விளையாட்டு அணி செயலாளர் மைதீன் பாதுஷா, நகர துணை செயலாளர் சமாதானிய சாகுல், மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் சேக் செய்யது அலி பாதுஷா, நகர இளைஞரணி செயலாளர் ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story