வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் வீதி உலா
பட்டிவீரன்பட்டி அருகே வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து விழாவில் நேற்று முன்தினம் வரதராஜபெருமாள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று பெருமாள் அன்னபட்சி வாகனத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்காக எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Related Tags :
Next Story