மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை


மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ்சூப்பிரண்டு ஆர்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடுமையான நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மணல் கடத்தும் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக மணல் கடத்தல் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 15 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்கலாம்

கள்ளத்தனமாக மணல் கடத்துபவர்கள் பற்றிய தகவல் அளிக்க 9442992526 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story