குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை-போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை-போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கடும் நடவடிக்கை

நெல்லை மாநகரில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குடிபோதையிலும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டுதல் மற்றும் தன்னுடைய செயல் மரணத்தை விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்தும் அவ்வாறு வாகனத்தை ஓட்டுவோர் மீது இந்திய தண்டனை தட்டம் 308-ன்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கடந்த சில நாட்களில் இவ்வாறு வாகனம் ஓட்டிய நெல்லை டவுனை சேர்ந்த தினேஷ்குமார், முத்து ஜெகன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்தால் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story