சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டைபெற்று வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதில் பாதயாத்திரை குழுவாக வரும் பக்தர்கள் பழனிக்கு வந்து சமைத்து அடிவாரம் பகுதியில் உள்ள மண்டபங்களில் சமைத்து உணவு சாப்பிடுகின்றனர். மற்றபடி ரெயில், பஸ்களில் வரும் பக்தர்கள் அன்னதானம் மற்றும் பழனி அடிவார பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.
அதேபோல் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு செல்லும்போது பஞ்சாமிர்தம், பொரி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளில் திறந்தவெளியில் வைத்து உணவு பொருட்கள் விற்கப்படுகிறது. அதேபோல் பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதும் இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறும்போது, உணவு பொருட்களை திறந்தவெளியில் வைத்து விற்ககூடாது. அவ்வாறு சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த கூடாது. மேலும் அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றனர்.