டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை


டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்து உள்ளார்.

ராமநாதபுரம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கள்ளச்சாராய தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அரசு மதுக்கடைகள் மற்றும் பார்களில் காவல், வருவாய் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆகிய துறை அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். மேலும் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் ஒருங்கிணைந்து கிராம பகுதிகளில் நாள்தோறும் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு நிர்ணயித்த விலையில்...

அதேபோல் பொதுமக்களும் கள்ளச்சாராயம் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் அரசு மதுக்கடை மற்றும் பார்கள் அரசு அனுமதித்த நேரங்களில் மட்டும் செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

இதை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு நியமித்து அவ்வப்போது ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், தாசில்தார்கள் செண்பகலதா, ராஜகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story