பதனீரில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை


பதனீரில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை
x

பதனீரில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோர்ட்டு அருகே காவலர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் புற்களை பிடுங்கி அப்புறப்படுத்தும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு சைக்கிளில் பதனீர் கொண்டு வந்து விற்ற வியாபாரியிடம் இருந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பதனீர் வாங்கி குடித்தனர். இதில் 3 பேருக்கு வயிற்று போக்குடன் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் சந்திரமோகன், சரவணக்குமார், ஜாபர் சாதிக் ஆகியோர் நேற்று நகர் பகுதியில் சாலையோர பதனீர் விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனை செய்யப்படும் பதனீர் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பதனீரின் இனிப்பு தன்மையை அதிகரிப்பதற்காக சில எசன்சுகளை வியாபாரிகள் கலப்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

அந்த எசன்சு காரணமாக கூட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வியாபாரிகளை கடுமையாக எச்சரித்தனர். மேலும் பதனீரில் எந்த எசன்சும் கலக்காமல் விற்பனை செய்ய வேண்டும். கலப்படம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story