கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது, மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.போதை பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.