பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2023 1:49 AM IST (Updated: 13 Jan 2023 1:51 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம்

சூரமங்கலம்:

பொங்கல் பண்டிகை

தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக பொதுமக்கள் ெரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்கிறார்கள்.

முக்கிய வழித்தடங்களில் செல்லும் அனைத்து ெரயில்களும் ஏற்கனவே நிரம்பி விட்டதால் கடைசி நேரம் முயற்சியாக தட்கல் டிக்கெட் எடுக்க பயணிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

சோதனை

ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் தட்கல் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்கிறார்கள். இதில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ெரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜென்சிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தட்கல் டிக்கெட்டை போலி பெயர்களில் பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் நபர்களை கண்டுபிடிக்க வழக்கத்தைவிட தொடர்ந்து அதிகளவு தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். இதேபோல் ஒரே நபர் பல பெயர்களில் ஐ.ஆர்.சி.டி.சி. ஐ.டி.க்களை உருவாக்கி தட்கல் டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனரா? எனவும் சோதனை செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு

மேலும் இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் ரெயிலில் பயணம் செய்ய அதிகப்படியான நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். தனியார் ஏஜென்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் அதிக பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக போலி பெயர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறோம் என்றனர்.


Next Story